ராசிபுரம்: தவெக சார்பில் அன்னதானம்

ராசிபுரத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் (உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-05-28 14:17 GMT

உலக பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த பட்டினி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பல்வேறு சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பட்டினி இல்லாத உலகை உருவாக்கும் நோக்கில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதன்படி தமிழக வெற்றி கழகம் தலைவர்  விஜய்யின் ஆணக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ அவர்களின் ஆலோசனைப்படி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டம் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று (28.5.2024) ஒரு நாள் இலவச மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகத்தின், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை ஜெ.ஜெ.செந்தில் நாதன் அவர்கள் தலைமையில் ஏழை எளியோருக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவாக கேசரி ,சாம்பார், ரசம், மோர், அப்பளம்-முட்டை, வடை, தண்ணீர் பாட்டில்கள் போன்றவை வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News