கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
டூவீலரில் சென்றவரை இடை மறித்து, கத்தியை காட்டி, பணம் பறித்த இருவர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-03 05:35 GMT
பணம் பறித்த இருவர் கைது
பணம் பறித்த இருவர் கைது
பணம் பறித்த இருவர் கைது
டூவீலரில் சென்றவரை இடை மறித்து, கத்தியை காட்டி, பணம் பறித்த இருவர். பறிகொடுத்தவர் கூச்சலிட்டதால் பொதுமக்கள் குற்றவாளிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி, அரசு காலணி, தங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது 38. இவர் ஜனவரி 1ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், அவரது டூவீலரில் கரூர்- வாங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பாலம்மாள்புரம் அருகே வந்தபோது, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்,காந்திநகர், 10-வது தெருவை சேர்ந்த, கார்த்திகேயன் வயது 20,தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள பரைநாடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிதுரை வயது 21 ஆகிய இருவரும் கோபிநாத் சென்ற டூவீலரை இடைமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, பணப்பையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சடைந்த கோபிநாத், திடீரென கூச்சலிட்டு உள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி, தகாத செயலில் ஈடுபட்ட இரு இளைஞர்களையும் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர்க்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் மட்டுமல்லாது,ஈரோடு, கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் இவர்கள் இருவர் மீதும் உள்ளதை கண்டுபிடித்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.