நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டுபேரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-25 04:42 GMT
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
நீடாமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நீடாமங்கலம் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நவீன் குமார், லோகநாதன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நவீன்குமார், லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.