விருதுநகரில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த இருவர் கைது

விருதுநகரில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-12 15:56 GMT
கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த இருவர் கைது

விருதுநகர் பாலியையைச் சார்ந்த வீர மகேஸ்வரன் வயது 19 இவர் சென்னையில் இருந்து விற்பனைக்காக 53 பாக்கெட் 50 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வாங்கிவிட்டு விருதுநகர் வருவதாக விருதுநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அவர்கள் விருதுநகர் மதுரை சாலையில் பி ஆர் சி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பேருந்து நிறுத்தத்திற்கு சென்னையில் இருந்து விருதுநகர் வந்து இறங்கிய வீர மகேஸ்வரன் மற்றும் அவரை அழைத்துச் செல்ல வந்த, 

 விருதுநகர் பட்டம் புதூர் கிராமத்தை சார்ந்த மாதவன் வயது 19 ஆகிய இருவரையும் பிடித்த தனிப்படையினர் அவர்களிடமிருந்த தலா 50 கிராம் எடையுள்ள 53 பாக்கெட் அவர்களை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேற்கு காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விற்பனை விசாரணை நடைபெற்று வருகிறது

Tags:    

Similar News