ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
எலுமிச்சனஅள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
Update: 2024-06-24 11:36 GMT
பைல் படம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் குடிமை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இப்போது அங்கு வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் தண்டுக்காரன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரசு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த ஆம்னி வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்