புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த இருவர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 11:09 GMT
காக்கழனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த காக்கழனி பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் குருமூர்த்தி மற்றும் புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அரவிந்தன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் பாக்கெட், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.