மூன்று மின்மோட்டார்களை திருடிய இருவர் கைது
புதுக்கோட்டை அருகே பாக்கு மட்டைத் தொழிலகத்தில் 3 மின் மோட்டார்களைத் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
Update: 2024-01-01 07:00 GMT
திருச்சி மாவட்டம், கே.கே. நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (74). இவர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சத்தியமங்கலத்தில் பாக்குமட்டை தயாரிக்கும் தொழிலகத்தை நடத்தி வருகிறார்.கடந்த இங்குள்ள 3 மின் மோட்டார்களை சிலர் திருடிச் சென்றுவிட்டதாக காவல் வெள்ளனூர் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், சத்தியமங்கலம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரித்திவிராஜ் (19), சேலம் ஆத்தூர் அருகேயுள்ள முயல்கரடைச் சேர்ந்த கனகராஜ் மகன் அஜித் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 மின் மோட்டார்கள் மற்றும் திருட்டு வேலைக்காக பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.