காங்கேயத்தில் போக்சோ வழக்கில் இருவர் கைது
காங்கேயத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இருவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட சாம்பவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மைக்கேல் வயது 24. இவர் மனைவியுடன் வேலை பார்த்து வந்த காங்கேயத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் அவரது மனைவியை பார்க்க வந்த போது தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை அந்த சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக காதலித்து வரும் காங்கேயம் தாராபுரம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வரும் ஜெரின் வயது 23 என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தனது வீட்டிற்கு அழைத்து காதலன் ஜெரின் அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கில் மைக்கேலையும், ஜெரினையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.