மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் பலி
கோபால்பட்டி அருகே உப்புச் சோனையையில் விவசாயி வளர்த்து வந்த இரண்டு மாடுகள் மின்னல் தாக்கி பலியானது.
Update: 2024-06-06 09:05 GMT
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகேயுள்ள ஜோத்தாம்பட்டியை அடுத்த உப்புச்சோனையை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 38)விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் தான் வளர்த்து வந்த மாடுகளை தென்னைமரத்தில் கட்டியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு7மணி அளவில் அப்பகுதியில் திடீரென மின்னல்,இடி பெரும் சத்தத்துடன் விழுந்ததில் சத்தியராஜ் வளர்த்து வந்த 2 பசுமாடுகள் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவைகள் பரிதாபமாக இறந்தன.
இதனை கண்ட சத்தியராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.இதனை அடுத்து கோபால்பட்டி கால்நடை மருத்துவர் முருகானந்தம் அங்குவந்த மாடுகளை உடற்கூறாய்வு செய்தார்.இதனையடுத்து மாடுகள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டன.