50 சென்ட் நிலத்திற்காக இரு தரப்பினர் கோஷ்டி மோதல் !

அருமனை அருகே 50 சென்ட் நிலத்திற்கு இரு தரப்பினர் கோஷ்டி மோதல். வழக்கறிஞர்கள் உட்பட பலர் காயம்.போலீசார் விசாரணை.

Update: 2024-06-14 05:15 GMT

கோஷ்டி மோதல்

அருமனை அண்டுகோடு அருகே சாண்டிப்பாறை என்ற பகுதியில் மூடோடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன்சன் மற்றும் மார்த் தாண்டம் கீழ்பம்மம் பகு தியை சேர்ந்த எபநேசர் ஆகியோருக்கு சொந்தமான இடம் அருகருகே உள்ளது. இவர்களது நிலத்துக்கு இடையே 50 சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலம் தன்னுடையது என இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலம் தனது தந்தைக்கு சொந்தமான சொத்து எனவும், அதனை சட்டவிரோதமாக ஸ்டீபன்சன் பெயருக்கு தனிப் பட்டா வழங்கப்பட்டுவிட்டதாகவும் எபநேசர் குற்றம் சாட்டிய நிலையில் ஸ்டீபன்சன் மறுத்து வந்தார்.இந்த நிலையில் 50 சென்ட் நிலத்துக்கு எபநேசர் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஆர்டிஓ மற்றும் டிஆர்ஓ தரப்பில் ஸ்டீபன்சனுக்கு வழங்கப் பட்ட தனிப்பட்டாவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைய டுத்து எபநேசர் தரப்பினர் அந்த 50 சென்ட் நிலத்தில் வேலி போடுவதற்காக வந்தனர்.இதையறிந்ததும் ஸ்டீ பன்சன் தரப்பினரும் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அப்போது இருதரப் புக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் உள்பட இருத ரப்பை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் வேலி அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கி கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் அருமனை ஆய்வாளர் ரங்கநாத பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக ஸ்டீபன்சன் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறினார்.எனவே நீதிமன்றத் தில் வரும் உத்தரவை பொறுத்து நிலம் யாருக்குசொந்தமானது என முடிவு செய்யலாம்.

அதுவரை இந்த 50 சென்ட் நிலம் வழியாக ஸ்டீபன்சன், எப நேசர் ஆகியோர் செல்ல 3 அடி பொது பாதை அமைக்கப்படும்.அதனை இருவருமே பயன்படுத்திக்கொள்ள லாம் என போலீசார் தெரிவித்தனர். இதைய டுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News