குட்கா கடத்திய இருவர் கைது
எலவனாசூர்கோட்டையில் நடந்த வாகன சோதனையில் அத்துமீறி குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-03-03 09:26 GMT
எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் நேற்று காலை ஆசனுார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி விசாரித்தனர்.
அதில், குணமங்கலத்தை சேர்ந்த தேவராசு மகன் செல்வமூர்த்தி, 25; எலவனாசூர்கோட்டை முனுசாமி மகன் சஞ்சீவி, 53; என்பதும், பைக்கில் குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்திச் செல்வதும் தெரிவந்தது. இதனையடுத்து செல்வமூர்த்தி, சஞ்சீவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, 2,700 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.