தாராபுரம் அருகே லாரி மோதி இருவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

தாராபுரம் அடுத்த சின்னக்காம் பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி பெண் மற்றும் ஆண் இருவர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

Update: 2024-03-26 16:07 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்த செல்லான் மகன் ஆறுமுகம் (55) கூலி தொழிலாளி. இவர் கூலி வேலைக்காக செல்ல வந்தவர் சின்னக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில்  டீ குடித்துவிட்டு சாலையோரம் அமர்ந்திருந்தார்.

அதேபோன்று சின்னக்கம்பாளையம் தங்கம்மாள் (65) இவர் சின்னக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அதேபோல சின்னக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து( 60). இவரும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.

தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி சாலையை நோக்கி வந்த லாரி சின்னக்கம்பாளையம் பிரிவு அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ளவர்கள் மீது மோதியது.இதில் ஆறுமுகம், தங்கம்மாள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நாச்சிமுத்து படுகாயமடைந்தார். லாரி சாலையில் நின்றவர்கள் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் லாரி டிரைவர் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினார் . பிறகு அங்கிருந்தவர்கள் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் ஆறுமுகம் மற்றும் தங்கம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். நாச்சிமுத்து படுகாயம் அடைந்தவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் .சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகம் மற்றும் பொன்னம்மாள் உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர் .

அப்போது லாரி ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என விஷயம் தெரிந்ததும் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலை அறிந்த தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் தாசில்தார் கோவிந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருந்தாலும் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர். இதனால் தாராபுரம் கரூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News