முன்விரோதம் காரணமாக தடியால் தாக்கி மிரட்டல் விடுத்த மூவரில் இருவர் கைது !

முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் தடியால் தாக்கி மிரட்டல் விடுத்த மூவரில் இருவர் கைது. மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Update: 2024-03-14 08:34 GMT

காவல் நிலையம்

முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் தடியால் தாக்கி மிரட்டல் விடுத்த மூவரில் இருவர் கைது. ஒருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம், வடக்கு வெள்ளியணை , திருமலை நாதன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் வயது 44. இவரது தங்கையின் கணவர் சிவகுமார் வயது 37, ரமேஷ் குமாரின் மனைவி தனலட்சுமி வயது 40 ஆகிய மூன்று பேரும் மார்ச் 12ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் திருமலை நாதன்பட்டி நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவியரசு வயது 19, இவரது மூத்த சகோதரர் சுதாகர் வயது 22, இவர்களது தந்தை பரிமளராஜன் வயது 48. இவர்கள் மூன்று பேரும் ரமேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், தகாத வார்த்தை பேசியதை மனதில் வைத்துக் கொண்டு, தற்போது தகாத வார்த்தை பேசி, ரமேஷ் குமார், சிவக்குமார், தனலட்சுமி ஆகியோரை தடியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ரமேஷ் குமார், சிவகுமார், தனலட்சுமி ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, ரமேஷ் குமார் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தகாத வார்த்தை பேசி தகராறரில் ஈடுபட்ட கவியரசு மற்றும் பரிமளராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் சுதாகர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய சுதாகரை தேடி வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Tags:    

Similar News