திருப்பூரில் விநாயகர் சிலையை மறைத்து வைத்த 2 பேர் கைது

திருப்பூரில் விநாயகர் சிலையை மறைத்து வைத்திருந்த இரண்டு பேரை 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-05 16:51 GMT
இருவர் கைது

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி ( 24 ).  அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ( 25 ) முருகன் ( 25 ) ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைத்துள்ளனர். விநாயகர் சிலை வழிபாட்டு முறையினை பின்பற்றுவதில் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் நேற்று இரவு செந்தில்குமார் மற்றும் முருகன் இணைந்து வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். இது குறித்து மூர்த்தி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு செந்தில்குமார் மற்றும் முருகனை கைது செய்தனர். மறைத்து வைத்திருந்த விநாயகர் சிலையையும் மீட்டனர்.

Tags:    

Similar News