ஆத்தூரில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
ஆத்தூரில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 11:39 GMT
கைது செய்யப்பட்டவர்கள்
ஆத்தூர் நகர போலீஸார் சேலம் - உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் பெங்களூரு, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத் (34), லோகேஷ் (36), என்பது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது அர்கள் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் சொகுசு காருடன் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் 21 பவுன், அரை கிலோ வெள்ளி, கடத் தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மஞ்சுநாத் லோகேஷை, கைது செய்தனர்.