வாகன விபத்தில் இருவர் பலி

காங்கேயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த டூவிலர், கார் விபத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ர்ந்த் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.;

Update: 2024-03-12 11:06 GMT

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்காவைச் சேர்ந்தவர்கள் விஷ்னு வயது 23 மற்றும் சக்திவேல் வயது 23. இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கரூரில் இருந்து கோவைக்கு தனக்கு சொந்தமான மோட்டார் பைக்கில் காங்கேயம் வழியாக‌ கோவை சென்றுள்ளனர். அப்போது காங்கேயம்-கோவை சாலையில்  உள்ள தனியார் கேஸ் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோ சாலையில் குறுக்கே திரும்பியுள்ளது. அப்போது பின்னால் இளைஞர்கள் ஓட்டி வந்த மோட்டார் பைக் ஆட்டோவின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து‌ பருகாயம் அடைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள்‌ மற்றம் வாகன ஓட்டிகள் காப்பாற்ற முயன்ற போது அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மீண்டும் கீழே விழுந்த இளைஞர்கள் மற்றும் அருகில் நின்ற ஐயப்பன் வயது 29 என்பவர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.இதனை அடுத்து உடனடியாக அந்த இளைஞர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர்.

Advertisement

 அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு‌ விஷ்ணு என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், சக்திவேல் என்பவரை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் துரதிஷ்டவசமாக சக்திவேலும் கோவை மருத்துவமனையில் உயிரிழந்தாக மருத்துவர் பரிசோதித்து விட்டு தெரிவித்துள்ளனர். ஐயப்பனுக்கு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலிஷார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரவு நேரத்தில் நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு  காங்கேயம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News