பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் !

இரணியல் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-03-20 04:51 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காஞ்சிரவி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (51) திங்கள் நகர் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இவர் பன்னிகோடு பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். சம்பவ தினம் இரவு இரணியல் சந்திப்பில் இருந்து தக்கலை நோக்கி பைக்கில் சென்றுள்ளார்.     கண்ணாட்டு விளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த பைக் எதிர்பாராத விதமாக முத்துக்குமரன் பைக் மீது மோதியது.  இந்த விபத்தில் பைக்கில் வந்த இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் முத்துக்குமாரனுக்கு இடது கையில் ஒடிந்தது. இன்னொரு பைக்கில் வந்த முரளி (32) என்பவருக்கும்   படுகாயம்  ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர்  இரண்டு பேரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் முத்துக்குமரன் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து முத்துக்குமரன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முரளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News