முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-12 12:41 GMT

 கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 11-ம் தேதி மதியம் 3 மணி அளவில், மீனாட்சி வலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட புகலூர் தாலுக்கா, துக்காச்சி பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், அதே பகுதியைச் சேர்ந்த நாச்சி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 100 ஐயும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags:    

Similar News