கஞ்சா விற்றவர்கள் கைது - 1.10 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செயது சிறையில் அடைத்தனர்.

Update: 2024-03-26 06:59 GMT

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி அப்பகுதிக்கு தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மற்றும் போலீசார் ஆகியோர் தாராபுரம் -திருப்பூர் சாலையில் ஐ.டி.ஐ.கார்னர் பகுதியில் கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்த திருப்பூர் கொடுவாய் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் பாண்டி முருகன்(65), உத்தரபிரதேசம் நௌசத் மகன் ஷாஹபஜ்(27), ஆகிய இரண்டு பேர்களை பிடித்து விசாரித்ததில், தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டனர்.

பிறகு போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இருவர் மீது வழக்கு பதிவு செய்து , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.


Tags:    

Similar News