ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து இரண்டு பேர் பலி 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-08 15:39 GMT

ஆம்னி பேருந்து விபத்து 

 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் அருகே தென்காசியில் இருந்து கோயமுத்தூர் சென்ற ஆம்னி பேருந்து கிருஷ்ணன்கோவில் அருகே தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்துசெல்வி,கார்த்திக் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 19 பேர் படுகாயத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஏழு பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் ஷாம் அந்த வழியாக பிரச்சாரம் முடித்துவிட்டு வரும்போது இந்த விபத்து ஆனது நடைபெற்று இருந்தது.

Advertisement

அந்த பகுதியில் நடந்த விபத்தை டாக்டர் என்ற முறையில் ஷாம் அவர்கள் முதல் உதவி செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்களை அனுப்பி வைத்தார். இந்த விபத்து சம்பவத்தால் மதுரை கொல்லம் தேசிய - நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்க்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

Tags:    

Similar News