டூவீலரில் சென்றவரை இடைமறித்து கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த இருவர் கைது

கரூர் மாவட்டம், தாந்தோனி மலை பகுதியில் டூவீலரில் சென்றவரை இடைமறித்து கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-02 15:48 GMT

வழிப்பறி

கரூர் மாவட்டம், தாந்தோணி மலை, சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் சண்முகம் வயது 53. இவர் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 8 மணி அளவில், ஏமூர் புதூரில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, தனது டூவீலரில் திருச்சி பைபாஸ் வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த காரைக்குடி வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் வயது 28 என்பவரும், தாந்தோணிமலை முத்துலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்த தென்னரசு வயது 23 ஆகிய இருவரும் சண்முகத்தின் டூவீலரை இடைமறித்து, கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 1500 வழிப்பறி செய்தனர்.

இந்த சம்பவத்தில் முகத்தில் காயம் அடைந்த சண்முகம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சண்முகம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சங்கரலிங்கம் மற்றும் தென்னரசு ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பணத்தில் ரூபாய் ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News