கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது! லாரி பறிமுதல்!..

திருப்பத்தூரில் உள்ள பிரபல டிரான்ஸ்போர்ட் வண்டியில் ஒரிசாவில் இருந்து ஆறு கிலோ கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது! லாரி பறிமுதல்!..

Update: 2024-07-11 05:13 GMT

காவல்துறை விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பிரபல டிரான்ஸ்போர்ட் வண்டியில் ஒரிசாவில் இருந்து ஆறு கிலோ கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது! லாரி பறிமுதல்!.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் வயது (24) மற்றும் சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் வயது 29 ஆகிருவரும் திருப்பத்தூரில் உள்ள பாலமுருகன் டிவிஎஸ் கம்பெனியில் வேலை புரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்த லாரியின் மூலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து புதிய டிவிஎஸ் கம்பெனியின் இருசக்கர வாகனங்களை கொண்டு வருவதும் கொண்டு போவதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல திருப்பத்தூரில் இருந்து டிவிஎஸ் கம்பெனியின் டிரான்ஸ்போர்ட் லாரியை எடுத்துக்கொண்டு ஓசூரில் உள்ள கம்பெனிக்கு சென்று அங்கிருந்து இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஒரிசாவில் உள்ள டிவிஎஸ் கம்பெனியில் இறக்கிவிட்டு அங்கிருந்து வந்துள்ளனர் ஒரிசாவில் மலிவு விலையில் கஞ்சா கிடைப்பதன் காரணத்தால் அங்கிருந்து இவர்கள் ஆறு கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த இந்த டிவிஎஸ் டிரான்ஸ்போர்ட் லாரியை மடக்கி சோதனை செய்ததில் ஆறு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் ஆறு கிலோ கஞ்சாவையும் லாரியையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த டிவிஎஸ் டிரான்ஸ்போர்ட் லாரியை போலீசார் சோதனை செய்யாத காரணத்தால் இதுபோல் தொடர்ந்து இந்த வண்டியில் கஞ்சா கடத்தி வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News