சங்ககிரியில் இரு மாதிரி வாக்குச்சாவடிகள் அமைப்பு
சங்ககிரியில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இரு மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்ட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் இரு மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தனர். இதனையடுத்து வாக்காளிடத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென எண்ணிய தேர்தல் ஆணையம் சங்ககிரி அருகே நட்டுவம்பாளையம் அரசு உயர்நிலைபள்ளியில்,
மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அதில் வாக்களிக்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் வரவேற்பாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களின் விபரங்களுடன் பல்வேறு வண்ண துணிகளால் வடிவமைக்கப்பட்ட இருக்கைகள்,
வாக்குச்சாவடி அறைகள் பலூன், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்கள் தன்சுயபடம் எடுத்துக்கொள்வதற்கான இடம் ஆகியவை வாக்காளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதே போல் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒரு வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அனைத்து,
நிலையலான அலுவலர்கள், போலீசார் உள்பட அனைவரும் பெண்களே பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இரு மாதிரி வாக்குச்சாவடிகளையும் நாமக்கல் மக்களவை தொகுதி பொது செலவின பார்வையாளர் அர்ஜூன்பேனர்ஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான லோகநாயகி, சங்ககிரி வட்டாட்சியர் கே.அறிவுடைநம்பி ஆகியோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.