டூவீலரில் சென்றபோது விபத்து - தந்தை அளித்த புகாரில் மகன் மீது வழக்கு பதிவு

டூவீலரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தந்தை அளித்த புகாரில் மகன் மீது வழக்கு பதிவு.

Update: 2024-03-10 14:28 GMT
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்கு உட்பட்ட சீதப்பட்டி அருகே உள்ள ஏமூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 62 .இவரது மகன் பாலசுப்ரமணி வயது 32. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் மார்ச் 7-ம் தேதி ஏமூரிலிருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் புது ரெங்கம்பாளையம் அருகே சென்றபோது டூவீலரை ஓட்டிய பாலசுப்பிரமணியன் வேகமாக செலுத்தியதால் எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த முருகேசனுக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Tags:    

Similar News