போச்சம்பள்ளியில் போலீசார் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
போச்சம்பள்ளியில் போலீசார் சார்பில் நடந்த இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியை பர்கூர் டிஎஸ்பி மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
போச்சம்பள்ளியில் போலீசார் சார்பில் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி : பர்கூர் டிஎஸ்பி மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் சராகத்திற்க்கு உட்பட்ட போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, பாரூர் ஆகிய காவல் நிலையங்கள் சார்பில் போலீசார் மாற்றும் ஓலா இருசக்கர தயாரிப்பு வாகன நிறுவனத்தின் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் கார் லாரி உள்ளிட்ட கனரா வாகனங்கள் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது மற்றும் எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த அம்சங்களை எடுத்துரைத்துரைத்தார்.
போச்சம்பள்ளி பாளேத்தோட்டம் சாலையிலிருந்து துவங்கப்பட்ட இந்த பேரணியானது போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் காவல் நிலையம் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த பேரணியானது நடைபெற்றது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் பேரணியில் உடன் கொண்டுவரப்பட்டது.
பனங்காட்டூரில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் நிறைவுற்ற இந்த பேரணியில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகளுக்கு குடிநீர் பிஸ்கட் மற்றும் குளிர்பானம் ஆகியவை வினோகிக்கப்பட்டது மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கர், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் கிரிஜாராணி, ஓலா எலட்ரிக் இருசக்கர வாகனம் தயாரிப்பு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு இயக்குநர் சந்திரசேகரன், நிர்வாகம் இயக்குநர் சுரேஷ்கண்ணன், ஜெயராமன், வெளி விவகார இனண இயக்குநர், காவல் உதவி ஆய்வாளர்கள் ரவி, கார்த்திகா, சிறப்பு காவல் உதவிய ஆய்வாளர்கள் சரவணன், மகாலிங்கம், கிருஷ்ணன், காவலர்கள் ராமகிருஷ்ணன், அருண், ஓலா கம்பெனி ஊழியர்கள் மற்றும் போச்சம்பள்ளி பாரூர் நாகரசம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் நிகழ்ச்சி நிறைவில் நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவசந்தர் நன்றியுரை வழங்கினார்.