இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் !

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பள்ளிபாளையத்தில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.;

Update: 2024-07-16 05:38 GMT

 பிரச்சார இயக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு அளவிலான மாபெரும் வாகனப் பிரச்சார பயணமானது நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தாற்கு பிரச்சாரப் பயணம் வாகனம் வந்தடைந்தது. ஆவரங்காடு பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

Advertisement

இதில் நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் குறித்தும் ,ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கை குறித்தும் எடுத்துக் கூறி பேசப்பட்டது .மேலும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பிரச்சார பயணமானது நிறைவு பெற்று, நாமக்கல் நகருக்கு சென்றது. ஜூலை 15ஆம் தேதியுடன் சேலத்தில் இந்த வாகனப் பிரச்சார இயக்கம் நிறைவு நாள் நிகழ்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News