காரிமங்கலத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
காரிமங்கலம் அரசு கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டப்ட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-26 15:38 GMT
இரு சக்கர வாகனம் திருட்டு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அருகே கன்னிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், பூ கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி காரிமங்கலம் அரசு கலைக்கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டார்.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, திருடு போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.