இரு சக்கர வாகனம் திருட்டு; இருவர் கைது

பரமத்தியில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-05 15:38 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வயல்நாடு,  செம்மங்காடு பதியைச் செய்தவர் சின்னசாமி (52). இவரது மகன் பிரேம்குமார் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுமார் ஐந்து பேர்கள் பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி‌ கூலிவேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 12- ஆம் தேதி  இரவு அவர்கள் தங்கி இருந்த அறைக்கு முன்பு பிரேம்குமார் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டனர். பின்னர் காலையில் எழுந்து பிரேம்குமார் இரு சக்கர வாகனத்தை பார்த்தபோது காணவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் இரு சக்கர வாகனம் கிடைக்கவில்லை. இது குறித்து பிரேம்குமார் பரமத்தி போலீசில் காணாமல் போன தனது இரு சக்கர வாகனத்தை கண்டு பிடித்து தருமாறு புகார் செய்தார். புகாரின் பேரில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு மோட்டார் சைக்கிளை திருடிக் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமத்தி பகுதியில்  பரமத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை  பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் கரூர் வெங்கமேடு அருகே காதப்பாறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து விஜய் (20) என்பதும், மற்றொருவர் வெங்கமேடு  பகுதியை சேர்ந்த பிரசாந்த் (22) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து பரமத்தியில் உள்ள ஒரு திருமணம் மண்டபம் அருகே நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. அதனையடுத்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News