இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது - போலீசார் விசாரணை
நாகை காடம்பாடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 04:42 GMT
இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது - போலீசார் விசாரணை
நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன் மனைவி சித்ரா வயது 28 இவர் வெளிப்பாளையம் போலீஸ் ரகத்திற்கு உட்பட்ட காடம்பாடியில் உள்ள கலங்கரை ஐஏஎஸ் மற்றும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார் இந்த நிலையில் பிப்ரவரி 10 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு சித்ரா தனது இருசக்கர வாகனத்தை பயிற்சி மையத்தில் நிறுத்திவிட்டு படிக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக சித்ரா வெளிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சித்ராவின் இரு சக்கர வாகனத்தை திருடியது நாகை நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அல்திஸ் மகன் நவீன் என்கிற அந்தோணி ஜான்சன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்தோணி ஜான்சனை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.