மாத்திரையை பதுக்கிய இளைஞர்கள் கைது

பெரியகுளத்து பாளையம் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-28 15:05 GMT

போதை மாத்திரை

.கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான போதை மாத்திரைகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று காலை பெரிய குளத்து பாளையம் அருகே உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த, வெங்கமேடு, திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த சூர்யா வயது 24, அதே தெருவை சேர்ந்த மனோஜ் என்கிற மண்ட மனோஜ் வயது 24,என்ற இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் போதை ஏற்படுத்தும் சட்டவிரோத மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூபாய் 627 மதிப்புள்ள 33 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், விற்பனை செய்வதற்காக அவர்கள் கொண்டு வந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர். 

Tags:    

Similar News