ஊர் ஊராக ஒற்றை செங்கலை தூக்கிச் செல்கிறார் உதயநிதி: எடப்பாடி
ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா உள்ளிட்ட பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம், ஆனால் அதை திறக்காமல் ஊர் ஊராக ஒற்றை செங்கலை தூக்கிச் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர்ராணிப்பேட்டை பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்பரை கூட்டத்தில் பேசும் பொழுது இது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அல்ல மாநில மாநாடு போல காட்சி அளிக்கிறது.
அதிமுக ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெற தொடங்கப்பட்ட கட்சி.இந்தக் கட்சியை சிலர் அழிக்க முயலுகிறார்கள் அவர்கள் இன்று அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறார்கள்.அதிமுக பற்றி யார் பேசினாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் இது கடந்த கால வரலாறு.ஒருவர் அதிமுகவே அழித்து விடுவேன் என்கிற சொல்கிறார் உன்னை போல் பலரை பார்த்த கட்சி அதிமுக கட்சி. 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. இந்தக் கட்சி ஐயா அளிக்க நினைக்கிறீர்கள் அளிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் இதுதான் சரித்திரம்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என 7.5 சதவிகிதம்உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தோம். ஒருவர் ஊர் ஊராக சென்று ஒற்றை செங்கல்லை தூக்கி காண்பித்து வருகிறார்.எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரவேண்டும் என்பது அம்மாவின் திட்டம். நீங்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து இருந்தால் தேவையான நிதி கிடைத்திருக்கும் இந்த திட்டம் நிறைவேற்றி விருப்பம். ஊர் ஊராக செங்கலை காட்டி விளம்பரம் தேடிக் கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
நாங்கள் சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டினோம் ஆனால் மூன்று வருடமாக இன்னும் செயல்படவில்லை. 1200 கோடியில் கால்நடை பூங்கா கட்டினோம்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா இதுவாகும். இப்படி பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம்,
ஆனால் திறக்காமல் ஊர் ஊராக ஒற்றை செங்கல்லை தூக்கி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின். என்ன கொடுமை பாருங்கள். இந்த திட்டம் வரக்கூடாது என பார்க்கிறார்கள். 2026 - ல் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். விவசாயிகளின் கனவை நினைவாக்குவோம். பல லட்சம் பேருக்கு திருமண உதவித்தொகை திட்டம் கொண்டு வந்தோம் . இதை திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள்.லேப்டாப் திட்டத்தையும் நிறுத்தி விட்டார்கள். திமுக ஆட்சி ரத்து செய்வதில் தான் சாதனை படைத்துள்ளது.இன்று மத்தியில் ஆட்சிக்கு வர ஸ்டாலின் முயற்சிக்கிறார் காரணம் கொள்ளை அடிக்கத்தான்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கட்சி திமுக கட்சி.பல ஊழல்களுக்கு சொந்தமான கட்சி திமுக கட்சி இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக அரசு தான். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக நடைபெற்றதுஅதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக நடைபெற்றது. இன்று அரிசி ஒரு கிலோ 17 ரூபாய் உயர்ந்துவிட்டது . உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது.
கொரோனா காலத்தில் தைப்பொங்கல் வந்தது.எல்லா ரேஷன் கார்டுக்கும் பொங்கல் தொகுப்பாக 2500 ரூபாய் கொடுத்தோம். அது காட்சி அல்ல. கட்சி என்றால் அதிமுக தான் கட்சி. சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வரலாம். பொதுச் செயலாளராகவும் வரலாம் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் இந்த தேர்தலில் அதிமுக கோட்டை என்பதை நிரூபித்து காட்டுங்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக்கொடி காட்டுங்கள் என பேசினார்.