முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த உதயநிதி

Update: 2023-11-23 04:43 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் நவாப்பின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் நவாப், நகரின் முக்கிய சந்திப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எட்டடி உயர வெண்கல சிலை அமைத்தார். இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே என் நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஆர். காந்தி, சக்கரபாணி, சிவசங்கர் மற்றும் திமுக செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி மாநில செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு திருவுருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் ஈரோட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவரால் வர இயலவில்லை இருப்பினும் முதல்வரின் சிந்தனை இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை ஒட்டியே இருக்கும் என்றார். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் நீண்ட காலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த சிலையை திறந்து வைக்க வாய்ப்பு தந்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கருணாநிதி அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்தி வெற்றியை கண்டவர் இந்த நல்ல நாளில் கலைஞரின் புகழை போற்றுவதுடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சரை தலைவர் ஸ்டாலின் அடையாளம் காட்டுவார் என பேசினார். இந்த சிலை திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News