எடப்பாடி பழனிச்சாமி போல் இடம் மாற்றிப் பேசுபவன் திமுககாரன் அல்ல - உதயநிதி

திமுக வை சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான நிலையை கொண்டவர்கள், பச்சோந்திகள் அல்ல எடப்பாடி பழனிச்சாமி போல் ஆளுக்கு ஏற்றார் போல் இடம் மாற்றம் செய்யும் நிலை தங்களுக்கு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.;

Update: 2024-03-26 08:06 GMT

தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் திறந்தவெளி வேனில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தன்னை செல்ல நிமிடங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக பேசுவதாகவும் அதனை மாற்றும்படி  கூறினார்.

Advertisement

அதற்கு காஞ்சியில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், திமுக வை சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மாதிரி நிலையை கொண்டவர்கள் எனவும் பச்சோந்திகள் அல்ல எனவும் எடப்பாடி பழனிச்சாமி போல் ஆளுக்கு ஏற்றார் போல் இடம் மாற்றம் செய்யும் நிலை தங்களுக்கு இல்லை எனவும், திமுக மாநில உரிமை நீட் தேர்வு விலக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அன்றிலிருந்து இன்று வரை கோரப்பட்டு வரும் வாக்குறுதிகளும் கோரிக்கைகளும் ஆகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு முன்பு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து பாசிச ஆட்சியை வீழ்த்துவோம் என அங்குள்ள குறிப்பேட்டில் எழுதினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News