உடுமலை ; குடும்பத்துடன் கேபிள் ஆப்ரேட்டர் மாயம்

உடுமலையில் கேபிள் ஆப்ரேட்டர் குடும்பத்துடன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-13 06:53 GMT

காவல் நிலையம் 

உடுமலை காந்தி சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (82). இவருக்கு சுமித்ரா தேவி என்ற மகளும் மருதநாயகம், சுப்பிரமணியம் என்ற மகன்களும் உள்ளனர். சுப்பிரமணியம் கேபிள் ஆப்பரேட்டராகவும், சிட்பண்ட்ஸ் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சுப்பிரமணியம் கீதாலட்சுமியிடம் கடன் பிரச்சினை சம்பந்தமாக புலம்பியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தனது மகனுக்கு ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement

10-ந் தேதி காலை கீதாலட்சுமி தனது மகன் சுப்பிரமணியனுக்கு போன் செய்தார். அப்போது அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சுப்பிரமணியம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு மகன், மருமகள், பேரன் ஆகியோரை காணவில்லை. அதை தொடர்ந்து கீதாலட்சுமி உடுமலை போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் குடும்பத்துடன் மாயமான சுப்பிரமணியம் அவரது மனைவி, மகனை தேடி வருகிறார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள், கடன் பிரச்சினையால் மாயமானார்களா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

Similar News