உளுந்தூர்பேட்டை: அரசு பள்ளி மாணவர்களுக்கு அகப்பயிற்சி
Update: 2023-12-03 10:20 GMT
அகப்பயிற்சி
உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற் கல்வி மாணவர்களுக்கு அகப்பயிற்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா தலைமை தாங்கினார். அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைமை காவலர் கங்கேஸ்வரி,எல்.ஐ.சி., கிளை மேலாளர் சிவக்குமார், தலைமை ஆசிரியர் மோகன்ராம், ஆசிரியர்கள் பிரேமா, சங்கர், பாண்டியன், கோதாவரி, மணிகண்டன், உடற் கல்வி ஆசிரியர் சிவ ஈஸ்வரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.