வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே: தற்கொலை செய்த பெண்
மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே என தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே! தூக்கிட்டு தற்கொலை செய்த பெண். கரூர் மாவட்டம், என். புதூர், தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகசுந்தரம் மனைவி பார்வதி வயது 46. இவர் அப்பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவில் ரூபாய் 25000 கடன் பெற்று இருந்தார்.
இந்த கடனை அவர் திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார். தன்னால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே! என வருத்தம் அடைந்த பார்வதி, ஏப்ரல் 14ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், தவிட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள, ஆட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பார்வதி. இந்த சம்பவம் அறிந்த பார்வதியின் சகோதரர் அரியராஜ் வயது 50 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பார்வதியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.