தடுப்பில்லா சாலை - வயலில் பாய்ந்த கார்

காஞ்சிபுரம் அருகே குதிரை கால்மடுவு பகுதியில் சாலையோர தடுப்பு இல்லாததால் கார் வயல் வெளிக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது.

Update: 2024-02-08 07:44 GMT

வயலில் இறங்கிய கார் 

காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் -பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை போடாத இடத்தில், எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இதில், குதிரை கால்மடுவு அருகே, ஆளுயரத்திற்கு சாலை உயர்த்தப்பட்டது. சாலையோரம் தடுப்பு அமைக்கவில்லை. இதனால், அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற, 'இன்னோவா' கார் தடுப்பு இன்றி வயல்வெளியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. எனவே, சாலை ஓரம் தாழ்வாக இருக்கும் பகுதிகளில், தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது."
Tags:    

Similar News