உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட குழு நியமனம்
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குறுவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள குழுவினரிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 20.03.2024 அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார்.
இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய்; மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 14.03.2024 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ஓட்டப்பிடாரம்; குறுவட்டத்தில் நிலஎடுப்பு அலுவலகம் (தேசிய நெடுஞ்சாலை NH-32) புவனேஸ்வரி மருத்துவமணை அருகிலும், வேடநத்தம் குறுவட்டத்தில் வேடநத்தம் நூலகத்திலும், பசுவந்தனை குறுவட்டத்தில் நாடார் திருமண மண்டபத்திலும், எப்போதும்வென்றான் குறுவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி, குறுக்குச்சாலையிலும், பரிவல்லிக்கோட்டை குறுவட்டத்தில் சமுதாய நலக்கூடத்திலும், மணியாச்சி குறுவட்டத்தில் ஒட்டநத்தம் சமுதாய நலக் கூடத்திலும் பெற உள்ளனர்.
எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம் என்ற விபரத்தினை மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.