கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு
S.வெள்ளாளப்பட்டியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத பெண் உடலை காவல்துறையினர் மீட்டு வழக்கு பதிவு செய்துள்ளானர்.;
Update: 2024-05-05 10:24 GMT
S.வெள்ளாளப்பட்டியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத பெண் உடலை காவல்துறையினர் மீட்டு வழக்கு பதிவு செய்துள்ளானர்.
S.வெள்ளாளப்பட்டியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியில் கிணற்றில் பெண் உடல் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்து உறுதி செய்தார் சணப்பிரட்டி கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார். இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிணற்றில் இருந்த அடையாளம் தெரியாத சுமார் 65 முதல் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, இது தொடர்பாக இறந்த பெண் யார்? அவரது பெயர் என்ன? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்வதற்காக தள்ளிவிட்டனரா? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து, பசுபதிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.