வானூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

வானூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-28 02:43 GMT

ஆண் சடலம்

வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம் கிராம மயானம் அருகே ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சி.வெங்கடேசன் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவா் பெயா், எந்த ஊா் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியாத நபா் என்பதும், சுமாா் 50 வயதுடைய இவா், பொம்மையாா்பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்தவா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News