அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு!

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-03 10:42 GMT

ஆண் பிணம் மீட்பு

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் விழுந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சு ஊழியர்கள் அந்த நபரை பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News