இருக்கன்குடி ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
சாத்தூர் அருகே இருக்கன்குடி ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.;
Update: 2024-01-08 12:46 GMT
சாத்தூர் அருகே இருக்கன்குடி ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றின் கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் குறித்து அப்பகுதியில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் சாத்தூர் அருகில் உள்ள ஓ மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (50) என்பது தெரியவந்தது. மேலும் இவர் இங்கு எதற்காக வந்தார். எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.