சேலம் : தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

சேலத்தில் நடைப்பெற்றது விழாவில் தேசிய தூய்மை பணியாளர்களுக்கான சீருடையை ஆணைய தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.

Update: 2024-03-15 09:45 GMT

சீருடை வழங்கல் 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்களுக்கான ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம், முழு உடற்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள், அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் ஆணையாளர் பேசும் போது தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா? என்பதையும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அரசிதழில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஊதியம் முழுமையாக கிடைப்பதையும் உறுதி செய்திட வேண்டும். அதேபோன்று, தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பணியாளர்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, 924 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான சீருடைகள், தையற்கூலிகள் மற்றும் ரூ.9 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தேசிய தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் வழங்கினார். மேலும், தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News