வேலூர் மாவட்டத்தில் கைப்பந்து போட்டிக்கு தேர்வானகளுக்கு சீருடைகள்
வேலூர் மாவட்டத்தில் மாநில கைப்பந்து போட்டிக்கு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 11:29 GMT
சீருடை வழங்கல்
மாநில அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி வேலூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் சேலம் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு விளையாடும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பயணப்படி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணைச் செயலாளர்கள் வேங்கையன், வடிவேல், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.