மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த அமைச்சர் !
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மகாத்மா காந்தி சிலையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 07:26 GMT
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சென்று சேர்ந்துள்ளது. இதனை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. மகாத்மா காந்தி அரசியல் சுதந்திரத்திற்காக போராடினார். இன்று நமக்கு பொருளாதார சுதந்திரம் தேவை தற்சார்பு பொருளாதார சுதந்திரத்திற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். அவ்வாறு உழைக்கும் போது 2047 ஆம் ஆண்டில் இந்தியா முன்னேறிய நாடாக மாறும். முன்னேற்றத்தில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட முடியாது. சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை ஆனால் இந்தியாவில் சுதந்திரம், ஜனநாயகம் உள்ளிட்டவை மதிப்பு மிகுந்ததாக உள்ளது. சீனாவில் செய்த அனைத்தையும் இந்தியாவில் செய்ய முடியாது. பொருளாதாரத்தில் இந்தியா பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவோம் மூன்றிலிருந்து நல்ல நிலைக்கு முன்னேறுவோம் அதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.