மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருமயம் வருகை
திருமயம் கோட்டையிலுள்ள காலபைரவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருமயத்திற்கு வருகிறார்.;
Update: 2024-04-12 06:05 GMT
அமித்ஷா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை (ஏப். 12) பிற்பகலில் வருகிறார். திருமயம் கோட்டையிலுள்ள காலபைரவர் கோயிலில் மாலை 5 மணிக்கு அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். இதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருமயம் வருகிறார். சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கார் மூலம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்குச் செல்கிறார். உள்துறை அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.