விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி !!
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி அளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சாமி கும்பிட மத்திய அமைச்சர் எல்,முருகன் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்கிறார்.
அந்த கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர் மீதும் தாய் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை சீர்கெட்டு உள்ளது குற்றவாளிகளை பாதுகாப்பது தமிழக காவல்துறைக்கு அழகல்ல youtube ல் ஏதாவது தகவல் வெளியிட்டால் அதிகாலை இரண்டு மணிக்கு கைது செய்யும் காவல்துறை இந்த இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களை இன்றும் கைது செய்யாதது ஸ்டாலின் முதல்வராக இருக்கிறாரா? ஆட்சி செய்கிறாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது நடத்துனரும் காவலரும் கட்டிப்பிடித்துக் கொள்வது கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுகிறதா? அரசு நிர்வாம் இல்லையா? இது மிகவும் கேவலமானது.
முதல்வர் ஸ்டாலின் கேவலமாக வேலை செய்து வருகிறார் கடந்த தேர்தலின் போது பாரத பிரதமர் இமயமலை சென்று தியானம் செய்தார் தற்போது தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு வருகை தந்து விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறார்.
2014இல் நாம் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்தோம் இப்பொழுது 10 ஆண்டுகளில் பொருளாதாரம் அதிக அளவு முன்னேறியுள்ளது இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளோம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள். 2027க்குள் மூன்றாவது இடத்தை அடைவோம். என்பது பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த கேரண்டி தமிழகத்தில் பாஜக யாரும் எதிர்பார்காத அளவில் வெற்றி பெறும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.