விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்.;

Update: 2024-06-20 06:24 GMT

மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல் முருகன் இன்று திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வருகை புரிந்தஅவருக்கு காஞ்சிபுரம் பாஜக மேற்கு மண்டல நகர தலைவர் ஜீவானந்தம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பாக மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பூங்குத்துக் கொடுத்து மேலும் பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கரமடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். சாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசுகையில் , பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று உள்ள நிலையில் , தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று அங்குள்ள விவசாயிகளுக்கும் மற்றும் இந்தியா முழுவதும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கான ரூபாய் 20000 கோடிகள் நிதியினை விடுவித்தார்.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் தான் கலந்து கொண்டு விவசாயிகளுடன் மகிழ்ச்சியுற்றேன் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கரமடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்றதாகும் தெரிவித்தார். அதன்பின் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சிறப்பு தரிசனத்தில் அம்மனை தரிசித்து வழிபட்டார். அவருக்கு கோயில் சார்பாக வரவேற்பளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட தலைவர் கே எஸ் பாபு, காஞ்சிபுரம் மாநகர பாஜக மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம், மாநில அமைப்புசாரா தொழிலாளர் அணி துணைத்தலைவர் கணேஷ், பாஜக நிர்வாகிகள் கூரம் விஸ்வநாதன், ஓம் சக்தி ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News