சிவகாசியில் ஓட்டை உடைசலுடன் மினி பேருந்துகள் : அச்சத்தில் பயணிகள்...
சிவகாசியில் போதிய பராமரிப்பிலாத மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
சிவகாசியில் அரசு பஸ்களுக்கு அடுத்தபடியாக, மக்களின் போக்குவரத்து சேவையில் மினி பஸ்கள் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கின்றன.அரசு பஸ்கள் செல்லாத கிராமப் புறங்களுக்கு மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவகாசியிலிருந்து லட்சுமியாபுரம்,நாராணாபுரம், ரிசர்வ்லயன், செங்கமலநாச்சியார்புரம், விஸ்வநத்தம்,பேராபட்டி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயங்குகின்றன.
இந்நிலையில் சிவகாசியில் இயங்கும் பெரும்பாலன மினி பஸ்கள் போதிய பராமரிப்பு இன்றி இயங்கி வருகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக சில மினி பஸ்களில் பின் கண்ணாடி இன்றி இயக்கப்பட்டு வருகின்றன.இதனால் பின்சீட்டில் உட்கார்ந்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.பயணிகள் உயிரோடு விளையாடாமல், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்க வேண்டும் என்றும், சிவகாசி மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.