ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கலைஞர் கனவு இல்லதிட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை தர்மபுரி மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு கேகேஐ, மற்றும் ஆர்ஆர்எச், திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.கலைஞர் திட்ட இல்ல பயனாளர்கள் தேர்வு குறித்து திருத்தப்பட்ட வழிநெறிமுறைகளை உடனே வெளியிடவேண்டும்.கேகேஐ, திட்ட பயனாளர்கள் மற்றும் ஆர்ஆர்எச், பயனாளர்கள் பட்டியலை இறுதிபடுத்த உரியகால அவகாசம் வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ், தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் வினோத்குமார் மாவட்ட தணிக்கையாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.பென்னாகரத்தில் வட்ட தலைவர் விஜயலக்ஷ்மி தலைமையகத்தின் மாவட்ட நிர்வாகி எம்.சுருளிநாதன் கோரிக்கைகளை விளக்கிபேசினார். பாலக்கோட்டில் வட்ட தலைவர் குணசேகரன் தலைமைவகித்தார்.மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சித்ரா கோரிக்கைகளை விளக்கிபேசினார்.காரிமங்கலதில் மாவட்ட நிர்வாகி சர்வோத்தமன் தலைமைவகித்தார். மாவட்ட இணைசெயலாளர் சென்னப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மொரப்பூரில் வட்ட தலைவர் ஜோதிகணேசன் தலைமையிலும்,அரூரில் மாவட்ட துணைத்தலைவர் பிரின்ஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கடத்தூரில் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட இணைசெயலாளர் சுரேஷ் பேசினார்.பாப்பிரெட்பட்டியில் மாவட்ட செயலாளர் தருமன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் கோபிநாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நல்லம்பள்ளியில் மாவட்ட துணைத்தலைவர் பாலகுமாரன் தலைமை வகித்தார் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி தனலட்சுமி பேசினார்.தருமபுரியில் வட்ட தலைவர் தீபக் குமார் தலைமை வகித்தார்.மாவட்ட மகளிர் அணி நிர்வாகி தேன்மொழி பேசினார்.